யோகேஷ் பிரபு இரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யோகேஷ் பிரபு இரா
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  13-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-May-2015
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  23

என்னைப் பற்றி...

தமிழ் கவிதை எழுதுவதில் கொள்ளை ஆர்வம் உள்ளவன்...

என் படைப்புகள்
யோகேஷ் பிரபு இரா செய்திகள்
யோகேஷ் பிரபு இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2015 12:04 am

தாய்ப்பாலும் தமிழும் ஒன்று....

மேலும்

நன்று. 23-Jul-2015 1:01 am
யோகேஷ் பிரபு இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2015 11:15 pm

சாயம் நிறைந்த சாக்கடை நீர் தான்
விவசாயத்திற்கு வித்தாகும் நீராம்...
செடி கொடிகளின் வளர்ச்சி வேகத்தைக் கூட்டிய
வேளாண் துறையினர்
உடன் நோய்களின் வேகத்தையும் விதத்தையும் சேர்த்துக் கூட்டினர்....

உழைப்புக்கு ஊதியமா??
உளறாதீர்கள்...
உழவன் எங்கே போனான்
உங்கள் உண்மையின் வரிசையில்...

முதுகெலும்பே முடங்கிவிட்டால்
மூன்று வேலை உணவிற்கு
முக்கால் கிலோ பணத்தை உண்ணுங்கள்....

தாய் மண் மலடாகிவிட்டால்
தாய்ப்பால் கூடச் சுறக்காது....

வருடம் முழுதும்
வயலில் பாடுபடும்
விவசாயி வயிறு நிறைய
ஒரு நாள் உணவு உண்டதுண்டா..??

வாரி வாரி வழங்கிய தாய்
இன்று வறண்டு கிடக்கிறாள்....

மேலும்

அருமை 22-Jul-2015 11:40 pm
யோகேஷ் பிரபு இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2015 10:30 pm

வெற்றிகள் வந்து
வெள்ளிக் கிரீடம் சூட்டுவதாய்
ஒரு வெள்ளைக் கனவு...
கனவுகள் நினைவாகக் காத்திருக்கிறேன்....
வாடிய காலங்கள் போய்
வசந்த காலம் தொடங்கிவிட்டது...
சோகங்கள் தொலைந்து
சொர்க்க வாசல் திறந்தது...
எடுக்கும் ஒவ்வொரு அடியும்
தொடுக்கும் ஒவ்வொரு நடையும்
இனி வெற்றிப் படியாகட்டும்....
கோட்டையில் கொடியேற்றும் நாள்
வெளிர்நெற்றியில் வெற்றித்திலகமிடும் நாள்....
புலப்பட்டது கண்ணில்..
வானமும் பூமியும்
சான்றோரும் ஆன்றோரும்
நிலமும் நீள்கடலும்..
மன்னவரும் தென்னவரும்
மாமன் மைத்துனர்கள்
மதிசூடிய மூத்தோர்கள்
மாலை அணிவித்து
மணி மகுடம் சூட்டும் நாள்
வாய்நிறைய வாழ்த்தும் நாள்

மேலும்

நல்ல கவிதை.. கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி செய்தால் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Jul-2015 11:33 pm
நட்பே!! உங்கள் உணர்ச்சி மிகு வரிகளில் நானும் கண்களில் கண்டு கொண்டேன் அந்நாளை நினைத்தால் என் தேகமே குளிர்கிறது என் எழுத்துக்கள் அழகாய் சிரிக்கிறது நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Jul-2015 11:04 pm
யோகேஷ் பிரபு இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2015 10:26 pm

ஆரிராரோ பாட்டுப் பாடி
'ஆ'வண்ணா எழுதச் சொல்லி
ஐயிரண்டு மாதங்களாய்
பக்குவமாய்ப் பாத்துப் பாத்து
என்னைப் பெத்தெடுத்த "அம்மா"
உன் முன்னாடி தெய்வமெல்லாம் சும்மா ......


சோறூட்டித் தாலாட்டி
ராப்பகலாக் கண்விழிச்சு
ராஜா ராஜன் மகனைப்போல
குறை ஒன்னும் வச்சதில்ல ....
குரும்பபாளையச் சோலையிலே.....


பஞ்சத்துல பிழச்சபோதும்
பட்டினியப் பாத்ததில்ல ...
பசிய நானும் கண்டதில்ல ...
நீ பத்துமாசம் சுமந்த பிள்ளை...
என்னைப் பெத்தெடுத்த "அம்மா"
உன் முன்னாடி தெய்வமெல்லாம் சும்மா ......


உன்ன விட உலகத்துல
ஒசந்தது எதுவுமில்ல ...
சோதனைகள் வேதனைகள்
நம்மை விட்டுப் போகும்காலம் ...

மேலும்

நண்பரே!! என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை தாய் பாசம் வரிகளில் ஆழமாய் வருடப்பட்டுள்ளது மனத்தால் உணர்ந்தால் வரிகள் வலிகளுடன் அன்பின் வெளிப்பாடு, வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Jul-2015 11:00 pm
யோகேஷ் பிரபு இரா - தேவனந்து அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2015 7:44 am

நண்பர்களுக்கும் உறவினர்க்கும் உள்ள பாசத்தின் வேறுபாட்டை கொஞ்சம் விரிவாக கூறுங்கள் ?

மேலும்

தங்களுடை விரிவான கருத்திற்கும் வரவுக்கும் மிக்க நன்றி. 12-May-2015 2:02 pm
உறவினர்கள் பாசம் என்பது தாமரை இலையின் மேல உள்ள தண்ணீர் மாதிரி....உங்களிடம் செல்வம் உள்ள வரை ஒட்டி உறவாடுவார்கள்....அனைத்தையும் இழந்த பின் விலகி விடுவார்கள்..... நண்பர்கள் பாசம் என்பது sirpam pondradhu.... Oru murai sethukkivitaal meendum pirikkavae mudiyaadhu..... 11-May-2015 3:09 pm
மேலும்...
கருத்துகள்

மேலே