வெற்றி

வெற்றிகள் வந்து
வெள்ளிக் கிரீடம் சூட்டுவதாய்
ஒரு வெள்ளைக் கனவு...
கனவுகள் நினைவாகக் காத்திருக்கிறேன்....
வாடிய காலங்கள் போய்
வசந்த காலம் தொடங்கிவிட்டது...
சோகங்கள் தொலைந்து
சொர்க்க வாசல் திறந்தது...
எடுக்கும் ஒவ்வொரு அடியும்
தொடுக்கும் ஒவ்வொரு நடையும்
இனி வெற்றிப் படியாகட்டும்....
கோட்டையில் கொடியேற்றும் நாள்
வெளிர்நெற்றியில் வெற்றித்திலகமிடும் நாள்....
புலப்பட்டது கண்ணில்..
வானமும் பூமியும்
சான்றோரும் ஆன்றோரும்
நிலமும் நீள்கடலும்..
மன்னவரும் தென்னவரும்
மாமன் மைத்துனர்கள்
மதிசூடிய மூத்தோர்கள்
மாலை அணிவித்து
மணி மகுடம் சூட்டும் நாள்
வாய்நிறைய வாழ்த்தும் நாள் ..
தாயையும் தந்தையையும்
தலைநிமிரவைக்கும் நாள்
நெஞ்சம் குளிர வைக்கும் நாள்...
இதோ வந்துவிட்டது...
விட்ட கண்ணீருக்கும்
இடைவிடா இன்னல்களுக்கும்
விடை சொல்லும் நாள் வந்துவிட்டது...
எழுத்துக்கள் எல்லாம் ஏணிப்படியாகட்டும்....
வார்த்தையையும் வாக்குறுதியையும்
காப்பற்றும் வல்லமை தொடரட்டும் ....
அன்பு வெல்லும்
தர்மம் தலைகாக்கும்
உண்மையை உரக்கச் சொல் ....
வெற்றி நிச்சயம்...
முற்கள் நிரைத பாதை முடிந்து
பூக்கள் பொதிந்த பொற்பாதை
பூவடிகள் தாங்கக் காத்திருக்கிறது...
கற்கலாம் போய் பொற்காலம் பொலிவுரட்டும்...

எழுதியவர் : தமிழ்நேசன் (யோகேஷ் பிரபு இ (13-Jul-15, 10:30 pm)
Tanglish : vettri
பார்வை : 212

மேலே