என் வலி எனக்கு சொந்தமல்ல
உன்னைதான் தேடுகிறேன்
எங்கே சென்றாய்.?
மூலையில் ஒளிந்து
கொண்டாயா.!
இதோ வந்துவிட்டேன்
இந்த பரிசை வாங்கிக்கொள்
பிரித்து பார்.!
பிறந்ததுமே குப்பைத்தொட்டியை
தாயாய் காணும் குழந்தையின்
கண்ணில் உள்ள வலியை விட.!
சொந்த உழைப்பில் மாளிகை கட்டி
பின் முதியோர் இல்லத்தில் நாழிகை
கழிக்கும் பெற்றோரின் மனதில் உள்ள வலியை விட.!
ஒரு இரவு உறக்கமேனும்
நிலையான மண்ணில்
கிடைக்காதா என ஏங்கும்
அகதியின் கண்ணீரில் உள்ள
வலியை விட.!
இன்னும் ஒருநாள் தருவாயா.!
என நோயுற்று சாவை
எதிர்கொள்ளும் தன்
குழந்தைக்காக எமனிடம்
கெஞ்சும் தாயின் வலியை விட.!
மனதில் தாலிகட்டி
மனைவியானவளுக்கு.!
மணமேடையில் ஒருவன் தாலி
கட்டுவதை காணும் காதலனின்
வலியை விட.!
என் தோல்விகளின்
வலி பெரிதல்ல.!!
என் தோல்விகளும்
அதன் வலிகளும்
எனக்கு சொந்தமல்ல
உனக்கே சொந்தம் இனி.!
வாங்கிக்கொள்
குப்பைத்தொட்டியே.!!