அணுக்களுக்குள் மறைத்து வைக்கப் பட்டவை
அணுவில்
எலக்ட்ரான்
புரோட்டான்
நியூட்ரான்
மட்டும் !
உள்ளதென்று
யார் சொன்னது?
அரசியல்வாதியின்
வார்த்தை அணுவில்
நயவஞ்சகம்...
ஏழையின்
வாழ்க்கை அணுவில்
வறுமை...
நண்பனின்(தோழியின்)
பேச்சு அணுவில்
உரிமை...
தமிழின்
எழுத்து அணுவில்
தொன்மை...
தந்தையின்
கோப அணுவில்
பாசம்...
குழந்தையின்
அழுகை அணுவில்
பிடிவாதம்...
அன்னையின்
கண்ணீர் அணுவில்
ஏக்கம்...
இசையின்
ஓசை அணுவில்
நிம்மதி...
சிப்பியின்
இதய அணுவில்
முத்து...

