உறவு ஒன்று உயில் எழுதுகிறது -17
தமிழில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும்
உன்னை அழைத்து கவுரவப்படுத்தி இருப்பேன்
எந்தக் கலவரத்திலும்
என் நிலவரம் அறிந்து கொள்ள
நீ அக்கறை காட்டாத கவலையோடும்
என் பிணத்தின் மீதும் கல்லெறிய நினைக்கும்
உன் கோபம் கண்டும்
என் தேகத்தில் சோகத்தை அப்பிவிடும்
உன் மௌனம் கண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் விலகுகின்றேன்.
நகம் கிழித்த கோடுதான்
நமக்குள் வந்த பிரிவென்று நம்பினேன்
கணநொடியில் விழுந்த கீறலாய்
கடைசிவரை மறையாதென்பதை
கண்கள் அறியாமல் போனது.
நீ என்னோடு பேசும்
வார்த்தைகள் முக்கியம் அல்ல.
ஆனால்
தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்
தவணை முறையில் நம் அன்பு
செத்துக் கொண்டிருகிறது என்பதை அறிவாயா.. அழகே.