மாலை நேரப் பயணம்
அடிவானம் சிவக்கும் அந்திமாலையில்
வேரோடு சாய்ந்து
இயற்கையோடு இணைய முற்பட்டது
பூக்காத எந்தன் காதல்..!!
நெடுவெங்கிலும்
முட்களின் சிரிப்பினில் பயணித்த எனக்கு
காதலின் கல்லறை அரவணைப்பே தந்தது..!!
துணைகொள்ள ஆளிருந்தும்
அரவமில்லா காட்டினைப்போல்
நாடியின்றித் துடித்தது எந்தன் இதயம்..!
சற்றும் விருப்பமில்லாமல்..!!
துயில்கொள்ள முயன்றும்
தோற்றுப்போய் - கனவொன்று கண்டேன்
விழித்திருக்கும் கண்களின் வாயில்வழியாக..!!
சலனத்தின் வளைவுகளில்
விதனத்தின் விசாரிப்பில்
சலிப்பில்லாமல் பதிலளித்தேன்..!
நான் உயிரல்ல..!! வெறும் உடலென்று..!!
மனமொன்று சேராமல்
என் மனமென்றும் சாகாமல்
பயணத்தை மட்டும் தொடர்கிறேன்..!
எதிரினில் நீ எதிர்ப்படுவாய் என..!
கனவுகளிலும் நினைவுகளிலும்..!!