கண்பார்வை இழந்த கம்பனின் கற்பனை

காற்றை உற்பத்தி செய்யும்
மரங்கள் இவள் சுவாச குழலில்
மூல பொருள் தேடுகின்றன

வெளுத்த மேகம் இருந்தும்
சுட்டு தள்ளும் சூரியன் இருந்தும்
மழை சாரல் மெல்ல என்னில்
சிலிர்கின்றன

அவள் கூந்தல் துவட்டையல

இவள் இதழுக்கு வண்டு கூட்டமும்
தேனீ கூட்டமும் போர் இட்டு
கொள்ளும் அடா

கிழக்கு வானம் இன்னும் சிவக்கவில்லை
என்றால் அது அவள் எழவில்லை
என்ற அறிகுறியடா...

கிளிகள் இல்லாமல் கீச்சி
இடும் சத்தம் கேட்டால்
அவள் சோம்பல் சத்தம்
என்று உணர்வேன்

அவள் சுடும் மலர்கள்
கூந்தலில் நூல் எடுத்து குடை செய்து
கொள்கின்றன வாடாமல் இருக்க

சிந்து சமவெளி நாகரத்தின் வரலாற்றை
இவள் நடையும் உடையும் தெளிவாக
எடுத்து உறைகின்றன

பனிக்கட்டி பல்லை கடித்து
முறைக்கும் போது பால் நிலவும்
அஞ்சு நடுங்குதடி

இவளை பார்த்த பின்னே
பகலிலும் நிலா தெரியும்
என்பதை இவளை பார்த்த பின்னே
ஒத்து கொள்கின்றன

இவளை பார்த்த பின்
மற்றவைகளை ரசித்து எழுத
என் கவிதை வரிகள் மறுக்கின்றன

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (13-Jul-15, 7:44 pm)
பார்வை : 189

மேலே