யோசிங்க மக்களே

            யோசிங்க மக்களே

இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்சியில் சட்னி அரச்சு
இலவச மின்விசிறிய போட்டு
இலவச டி வி யப் பார்த்துகிட்டு பொழுது போக்க இலவசமாய்
கொசு நோய் வந்தால்?
இலவச 108 ஆம்புலன்சில் ஹாஸ்ப்டலுக்கு போய் சேர்ந்து
இல்வச இன்சுரன்சில் சிகிச்சை பெற்று
இலவசமாய் 4கிராம் தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வாங்கி
கல்யாணம் பண்ணி இருபதாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று
இலவச கல்வியும்
இலவச புத்தகமும்  வாங்கி
இலவச யுனிபாமில்
இலவச செருப்பு போட்டு
இலவசமாய் வாங்கிய சைக்கிளில் பள்ளிக்குச் சென்று 
இலவசமாய் சத்துணவு சாப்பிட்டு 
இலவசமாய் லாப்டாப்பில் 
முகநூலில் விளையாடி
இலவச பேருந்து பாசில் வாழ்க்கையோட்டி இறுதியில்
இலவச முதியோர் பென்சனில்
காலங் கழிக்க ..அப்பாடா!
எனக்கு எதுக்குங்க வேலை?

நல்லா யோசிங்க மக்களே?!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Jul-15, 10:58 am)
Tanglish : yosinga makkale
பார்வை : 1210

மேலே