பெண் மகவு
பல்லாயிரம் அணுக்களுடன் போரிட்டு
இறுதியில் உயிர்த்தேன் உன் கருவறையில்!
வயிறும் வளர்ந்தது நானும் வளர்ந்தேன்
மேடிட்ட வயிறு தொட்டு “ஏன்டா கண்ணா இன்னும் துடிக்கவில்லை”
என்று கொஞ்சும் உன் சிணுங்கலில்
சிலிர்த்தே போனேன்……..!
நாளும் நகர்ந்தன; நானும் நகர்ந்தேன்
உன்னை தொட்டு பார்க்கும் ஆவலில் முட்டி மோதினேன்
சிணுங்களுக்கு பதிலாக வலியுடன் கூடிய முனகல் தான் கேட்டது
என்னை கட்டுபடுத்திக் கொண்டேன்!
உனை காணும் நாளும் நெருங்கியது ...
கண் விழித்தேன் ...!
வரவேற்றது உன் மடி என்னும் மெத்தை அல்ல ..
மரணம் என்னும் மெத்தை....!
அப்போதுதான் உணர்ந்தேன் !
நீ எனை கொஞ்சிய போது
கவனிக்க தவறிய என் பிழையை……
“ஏன்டா கண்ணா இன்னும் துடிக்கவில்லை”

