அன்னை என்ன விந்தை

அவனியிலே நான் பிறக்க,
அவன் அருளால் நீ உதித்தாய்...
பத்து மாதம் பார்த்துப் பார்த்து,
உன்னோடு எனை சுமந்தாய்...

நான் அழுத முதற்பொழுதில்,
வலி மறந்து நீ சிரித்தாய்...
உலகில் நான் பூத்ததுமே,
உள்ளத்தில் உவகையுற்றாய்...

உன் பால் கொடுத்து
என் பால் அன்பு வைத்தாய்...
உரக்கக் கத்தித் தூங்காவிடில்,
தாலாட்டில் கிறங்க வைத்தாய்...

முதல் ஆசிரியை எனக்கு நீ!!
முத்தமிழைக் கற்றக் கொடுத்தாய்...
உச்சியிலே முத்தமிட்டு,
நற்பண்புகளை ஊன்றி வளர்த்தாய்...

அறுசுவை உணவு படைத்தாய்..
அறம் அதனைக் கற்றுக் கொடுத்தாய்...
அனுதினம் என் தேவைகளை,
கேட்குமுன்னர் அள்ளிக் கொடுத்தாய்...

காய்ச்சல் சுட்ட பொழுதினிலே,
கண்ணீர் சொட்ட நிதம் காத்தாய்...
சான்றோனாய் எனை மாற்ற,
சாதாரணமாய் உனை மாற்றினாய்...

குழந்தையிலே குழந்தையனாய்
விடலையிலே தோழியானாய்...
என்ன விந்தை அம்மா நீ!!
எப்போதும் அரவணைத்தாய்...

அன்பு கூருவேன் அன்னையே..!
நீ மனித குலத்தின் பெருமையே..!
உன் நலத்தைப் பேணவே,
போராடுவேன் என்றென்றுமே...!

எழுதியவர் : கி. ஹெயின்ஸ் ராஜா (18-Jul-15, 10:54 pm)
Tanglish : annai yenna vinthai
பார்வை : 481

மேலே