நிகரில்லா வார்த்தை உனக்கு

அம்மா..,
அகிலத்தில் இச்சொல் போல் ஏதும் உண்டோ சொல்.

தாயே என்னை நீயே...

உயிராய், உருவாய் உருவாக்க நாளும்
மண்ணாய், விண்ணாய் பொறுமை கொண்டவள்.

கண்ணே, மணியே என்றென்னைக் காத்து
பசியை,தூக்கத்தை மறந்து போனவள்.

இன்பமாய்,துன்பமாய் நானிருந்த போதும்
மகிழ்வாய்,வலுவாய் ஆக்கி கொண்டவள்.

சரியாய்,தவறாய் என் பாதைகள் இருந்தும்
கரம் பிடித்து,வழி காட்டி பாதுகாத்தவள்.

என் இல்லம்,என் செல்வம் என்று நானிருந்தும்
எந்நாளும், எப்பொழுதும் என்னை நினைத்தவள்.

காலம் மாறி, வாழ்வு மாறி போகின்ற போதும்
இயற்கை போல்,இறையை போல் நின்றிருப்பவள்.

எல்லோருக்கும் தெரிந்தது ஒன்று -

பூமி சுற்றி கொண்டிருப்பதால் உயிர்கள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

எனக்கு புரிந்தது இன்று -

அம்மாக்கள் இங்கே இருப்பதால் - பூமி
சுற்றி கொண்டிருக்கிறது.

தாய்களே, தாய்களே வரம் ஒன்று கொடுங்கள்
இன்னொரு ஜென்மம் உங்களுக்கு இருப்பின்
எங்கள் வழியே வந்து தோன்றிடுங்கள்.

எழுதியவர் : செந்ஜென் (19-Jul-15, 1:26 am)
சேர்த்தது : செந்ஜென்
பார்வை : 293

மேலே