எனக்கான இரு நட்பு
கடுகு தாளிக்கும் போது
திடீர்னு கண்ணடிச்சு தெச திருப்பும்
கோலம் போடும் போது
விளக்கேத்த வத்திக்குச்சிய பத்த வெக்கும் போதும் கூட!
சே!
மடிக்காத துணிக்குவியல்
அடுக்காத பாத்திரம்
பிரிஜ்'ல இன்னும் என்டர் ஆகாத காய்கறிகள்
இப்படி அன்றாட வேலைகள கூட சரியா செய்ய விடாம...
இஷ்டத்துக்கு மின்னல் பிளாஷ் மாதிரி
வார்த்தைங்க அப்பப்போ கண்ணடிக்குது!
மனசு கேக்க மாட்டேங்குது
ஒரு குட்டி கவித, இல்ல
சின்ன பாட்டு
அதுபாட்டுக்கு வரும்போது
ஆசையா கூப்டு உக்கார வெச்சு
மனசார ஒரு நாலு வரியாவது எழுதற சொகம் இருக்கே...
''ஐ ஜஸ்ட் லவ் தட்!''
''கெடக்கறது கெடக்கட்டும் கவிதைய தூக்கி மனசுல வெய்!''னு
உள்ளேந்து ஒரு குரல் அடிக்கடி கேக்குது
யார் என்ன சொன்னாலும்
நான் அந்த குரல ரொம்ப மதிக்கறேன்!
என்ன பண்றது?
அப்படி ஒரு தீராக் காதல், கள்வெறி, கவிதை மேல!
இருக்கவே இருக்கு சமையல் சாப்பாடு
ஔடிங்க் ஷாப்பிங் சாட்டிங் கோசிப்பிங்...
நினச்ச நேரத்துல நினச்ச எடத்துல
என் கூடவே இருக்கற என் கற்பனையும்
என்னிக்குமே என்ன ஏமாத்தாத என்னோட கவிதையும் தான்
என்னோட பர்ஸ்டு பெஸ்டெஸ்டு பிரெண்ட்ஸ்!
சில தூக்கம் வராத அர்த்த ராத்திரில கூட
ஒரு அம்மா மாதிரி பாசமா ஹார்லிக்ஸ் கலந்து தருது
என்னோட செல்ல வார்த்தைங்க...
அப்படியே காம்ப்ளான் மாதிரி வளருது உள்ளுக்குள்ள கவித!
இப்போதிக்கு பிரேக் எடுத்துட்டு
ஆவின் பால் கவர் கட் பண்ணும் போது
பூவின் மேல் ஷவர் செட் பண்ண மழைத் துளிங்கள
காலைல கவிதையா காச்ச ட்ரை பண்றேன்!
___________________________________________________________________________
[யதார்த்த, பேச்சு வழக்கில் அமைந்த கற்பனையின் வெளிப்பாடு என்பதனால், சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன்; அதற்கு தோழமையுடன் மன்னிக்கவும்! தமிழும் என்னை மன்னிக்கும் என்று உரிமையுடன் நம்புகிறேன்! ]