பொய்யர்கள்

தேர்தல் தொடங்கிவிட்டது
தேவையில்லாத வேலைகள் எல்லாம் செய்வார்கள்
இனத்துவம் பேசி ஏமாற்ற நினைப்பர்
ஏழைகள் படும்பாடு அறியாதவர்
என்னதான் இவர்கள் பெரிதாக பேசினாலும்
சுயநலம் பிடித்த பிசாசுகள்
தங்கள் வீட்டு மதில்கள் நன்றாக இருக்கும்
மற்றவர் மதில்களையும் வீதியையும் குப்பையாக்கும் குள்ளநரிகள்
போதையை ஒழிப்போம் என வாய் கிழிய கத்துவார் தாம் வெல்வற்கு கடைசி நேரத்தில் சாராய போத்தல்களை இறக்குவார் இவர்களா சமூக அக்கறை கொண்டோர்