தடம்புரண்டக் காலம் - சந்தோஷ்
அதி வேகமாக சென்ற
அந்த இரயில்
தடம் புரளாமல் கச்சிதமாக
தன்னை
அந்த இடத்திலிருந்து
கடத்திக்கொண்டது.
கடந்தப்பின்
தடம்புரண்டோடியது
நிறைய இரத்தம்
அபூர்வ காதல்
அதிப்பயங்கர ஜாதிவெறி
அமங்களமான அரசியல்.
அநியாயமான தர்மம்
அவலட்சண ஊடகநாற்றம்
எல்லாம் எல்லாம்
தடம்புரண்டோடியது...
கூடவே தடம்புரண்டு
பின்னோக்கிச் சென்றது
காலம்
ஒரு இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு...!
அந்த இளைஞன் மேலேறிய
அந்த ரயிலுக்கும்
இந்த கொலைக்கும்
எந்த சம்மந்தமுமில்லையென
நன்றாக தெரியும்
அந்த தருமபுரி தண்டவாளத்திற்கும்....!
-இரா.சந்தோஷ் குமார்.