மது புரள்கிறது மனிதம் இருள்கிறது
ஆரோக்கியம் அலட்சியம்
அவசியம் வருமானம்
அற்புத அரசாங்கம்
இது அனைவருக்கும் அவமானம் ............
தாலிக்கு தங்கம்
தங்கத்திற்கு டாஸ்மாக்
மயக்கத்தில் மக்கள்
மலருமா ஜனநாயகம் ?
தரிசுகளாய் தாலிகள்
தகரங்களும் மிச்சமில்லை
செழிப்பில் மது விற்பனை
வியப்பில் பொது மக்கள் ............
வேண்டியவற்றை விட்டு விட்டு
வேண்டாதவற்றை விற்கும் வினோதம்
போராட்டங்கள் பொய்யாக்கப்படுகின்றன
உணர்வுகள் உதாசினபடுத்தபடுகின்றன ...........
பள்ளி படிப்பு பாழ் போகிறது
பட்ட சாராயம் வாழ்வாகிறது
இளமையை சபலம் தின்கிறது
இன்னும் ஏன் அரசு திணறுகிறது ?
பாடசாலைகள் பாழடைந்து கிடக்க
பாழடையவேண்டிய இடம் பளபளப்பாய் இருக்க
இயற்கைக்கு எல்லாம் எதிர் மாறாய்
இளைஞர்கள் வாழ்வும் எதிர்மாறாய் ...............
நீர் புரள நிலம் செழிக்கும்
மது புரள மனிதம் இருளும்
மாற்றுங்கள் மனிதமே
தேற்றுங்கள் நாளைய பாரதத்தை ...............
சமூக அக்கறையோடு
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்

