இது காதலா

என் இதயம் துடிக்கும்
துடிப்புகளுக்கெல்லாம் அர்த்தம்
புரியாமல் தான் துடித்து
கொண்டிருக்கிறேன்...உன்னை
பார்க்க வேண்டும் என்று
எத்தனை அடம் பிடிக்கிறது...
உன் குரலை கேட்க
எத்தனை தடைகளையும்
தாண்ட துணிந்து கிடக்கிறது...
உன் ஒற்றை பார்வையை
சந்திக்க முடியாமல்
திணறினாலும் காலம்
முழுவதும் உன்னோடு
பயணிக்க ஏங்குகிறது...
இதற்கெல்லாம் அர்த்தம் என்ன?...
காதலா?அதை மட்டும்
ஏற்றுகொள்ளாமல் காலம்
கடத்துகிறது....நீயாவது
கூறு இதற்க்கு என்ன தான்
அர்த்தம்....

எழுதியவர் : இந்திராணி (27-Jul-15, 3:50 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
Tanglish : ithu kaathalaa
பார்வை : 114

மேலே