நேசக் கள்வன் கலாம்
வாழ்விற்கு அர்த்தம் புதுப்பித்த
மகாப்பித்தன்
அவர் பேசிய வார்த்தைப் பொக்கிஷங்கள்
பதிக்கப்பட வேண்டிய வேதங்கள்....
முடிவை நோக்கி நகர்ந்த லட்சம் பாதங்களை
விரல்கூறும் மொழியால் முத்தமிட்டு இழுத்த தந்திரநல்லுள்ளன்...
நம் அசட்டுத்தனமான விளையாட்டையும்
சாதனை எனப் பெயர்சூட்டி
மகிழ்ந்த அறிஞன்....
உறங்கி எழுந்ததும் சிதறிச்செல்லும்
கனவுகளுக்கு உயிரூட்டக்
கற்பித்த ஆசான்.....
பிறந்து மடியும் மாக்களின்
மத்தியில் வரலாற்றை சொந்தம்
ஆக்கிக்கொண்டார் சாதனையாளன்....
இந்நாழிகைவரை மண்ணில் நின்று
பயிற்றுவித்த அறிவியலாளன்,
நாளை முதல் விண்ணில் பறந்து
பயிலச் சென்றுவிட்டார்
கல்விக்காதலனாக........
--------- ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
(என் தந்தையாம் உமக்கு என்னால் முடிந்த சிறு சமர்ப்பணம்)....