அக்னி சிறகு
ஏழை வீட்டின் மழலையே
இந்திய நாட்டின் இறைவனாய் அவதாரம் எடுத்தவனே
சாதிபதர்க்கு இல்லை எல்லை
நான் சாதிக்காதது எதுவுமில்லை என நிருபித்தவனே
இளைய தலைமுறையின் வழிகாட்டி
இந்திய நாட்டின் உயிர்நாடியாய் உருவெடுத்தவனே
தமிழர் நாம் எதிலும் தாழ்ந்தவர் அல்ல
தமிழன் ஒருபோதும் சோர்ந்தவன் அல்ல என மனமகிழ வாழ்ந்தவனே
உறக்கமின்றி உழைத்த நீ இன்று
உறங்க சென்றுவிட்டியோ
மண்ணில் மறைந்த மனிதன் சிதைந்து போகிறான் என்பதல்ல உண்மை
மண்ணில் மறைந்த விதை மீண்டும் ஒருநாள் மலர்விடும் என்பதே உண்மை...................