கனவு நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி
ராமேஸ்வரம் ஈன்ற நல்முத்தே !
தங்க தமிழகம் வழங்கிய மாபெரும் சொத்தே !
அணு ஆராய்ச்சி கண்ட முடி சூடா மன்னனே !
அக்னி சிறகுகளை வார்த்த தீந்தமிழே !
அண்ணா பல்கலையின் வளமே !
இந்திய திரு நாட்டின் இணையற்ற தலை மகனே !
இளம் சமுதாயத்தை உசுப்பிய உத்தம குருவே !
கனவு காண சொன்ன கலங்கரை விளக்கே !
இந்திய தேசத்தை உயர்த்திய உன்னதமே !
தங்க தமிழே ! தரணி போற்றும் புனிதனே !
தமிழரின் மாசற்ற செல்வமே !
உம்மை என்று காண்போம் !
உம் எண்ணங்களை வாழ்வாக்குவோம் !
உம் கனவுகள் மெய்பட உறுதி ஏற்போம் !
காற்றுள்ளவரை உம் கனவுகளோடு !
மூச்சுள்ளவரை உம் நினைவுகளோடு !
வாழ்க நீ எம்மான் இவ் வையம் உள்ளவரை ! !