அன்பை விதைத்துவிடு மனமே
அன்பை விதைத்துவிடு மனமே..நீ
ஆசையை சற்றே நீக்கிவிடு
இன்பம் விரும்பிவிடு மனமே..நீ
ஈகை செய்து பெருமைப் படு
உண்மையே பேசிவிடு மனமே..நீ
ஊருக்கும் கொஞ்சம் உழைத்துவிடு
எதையும் தாங்கிவிடு மனமே..நீ
ஏற்றம்தரும் செயல் செய்துவிடு
ஐம்புல னடக்கிவிடு மனமே..நீ
ஒன்றாய் வாழப் பழகிவிடு
ஓதி உணர்ந்துவிடு மனமே..நீ
ஒளவையின் சொல்லை ஏற்றுவிடு
அஃதே அறமெனப் போற்றிவிடு
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்