ஏவுகணை நாயகன்
இவ்வுலகில்...
எத்தனையோ மனிதர்கள் பிறந்திருக்"கலாம்".
எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்திருக்"கலாம்".
எத்தனையோ மனிதர்கள் இறந்திருக்"கலாம்".
ஆனால்,
பிறந்ததற்கும், வாழ்ந்ததற்கும்,
ஏன்.. இறந்ததற்கும் கூட
என்றும் எடுத்துக்காட்டாக விளங்குபவர்..
நம் அப்துல் "கலாம்".
ஐயா..
உயிர் உங்களை விட்டு பிரிந்திருக்"கலாம்“.
ஆனால் ; என்றும்..
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு பிரியாது.
உங்கள் உடல் இவ்வுலகை விட்டு மறைந்திருக்"கலாம்".
ஆனால்; என்றும்...
உங்கள் உருவம் எங்கள் இதயத்தில் இருந்து மறையாது.
தோழர்களே...
வாருங்கள்...
அவர் கண்ட கனவுகளை
நாமும் பார்க்"கலாம்"..
கனவுகள் நிறைவேர அயராது உழைக்"கலாம்".
இந்தியாவை...
தலைச்சிறந்த நாடாக உருவாக்"கலாம்".
அப்துல் கலாம்...
உங்களுக்கு என்றும்...
இவ்வுலகம் போடும் சலாம்.
-மகேஷ்