கனத்த இதயங்கள்

ஒரு முறை தான் பார்த்தேன்
அந்த ஒரு நொடியில் எப்படி
முழுவதுமாக பதிவு செய்தது
அவன் முகத்தை என் மனம்.

கண்டதும் காதல் கொள்ள முடியுமா ?
பார்த்ததும் பற்றிகொள்ளுமா ?
என் நீண்டநாள் கேள்விக்கான
பதிலை உணர்ந்தேன்.

இனம் புரியாத இம்சைகளையும்
இன்பமான அவஸ்தைகளையும்
அடுத்த நொடி முதல் என் செல்கள்
உணர ஆரம்பித்தன..!

நாட்கள் நகர்ந்தாலும்
நிமிடங்கள் இடைவெளியில் கூட
இடைவிடாத அவனின் நினைவுகள்
இடையூறானது என் இயல்பு வாழ்க்கைக்கு..

என் மேனியின் பசளைக்கு
என் மனதின் மாற்றத்துக்கும்
என் இயல்பின் பாதிப்புக்கும்
காரணமானவன் நீ என்று சொல்ல துடித்தது!

எங்கிருந்து வந்தது தெரியவில்லை
அத்தனை தைரியம் அவனை கண்டதும்
அருகே சென்று அத்தனையும்
கொட்டிவிட்டேன்..

என் மனதின் எடை குறைந்தது
திரும்பி பார்த்தேன்
நான் கடந்து வந்த பாதையை பார்த்துகொண்டிருந்தான்
கனத்த இதயத்தோடு..!!

எழுதியவர் : semina (19-May-11, 9:19 am)
Tanglish : kanaththa idayangal
பார்வை : 327

மேலே