வாழ்க்கை படிகள்

முதற்படியில் உன் தாய்
ஆதரவற்று கிடக்கலாம்.!
இரண்டாம் படியில்
உன் தந்தை நோயுற்று
தவிக்கலாம்.!
மூன்றாம் படியில் உன்
மனைவி பித்துப்பிடித்து
புலம்பலாம்.!
நான்காம் படியில் உன்
குழந்தையின் பிஞ்சு
கைகள் பிச்சை எடுக்கலாம்.!
ஐந்தாம் படியில் நீயே
உன்னை நொந்து
வேதனையில் இரத்த
கண்ணீர் வடிக்கலாம்.!
இன்று,இங்கு நீ ஏறும்
ஒவ்வொரு படியும்
நாளை உன்
வாழ்க்கைக்கான
எச்சரிக்கை படிகள்.!!
-கோவில் படிகட்டுகள்