கலாமிற்கு சலாம்
உனை இழந்து இந்த மண்பதைக்க
உனை ஏற்று அந்த விண் மகிழும்!
உனை இழந்து இங்கு தருக்கள் தவிக்க
உனை ஏற்று அங்கு உடுக்கள் ஒளிரும்!
உனை இழந்து இங்கு மாணவர் கதற
உனை வரவேற்று நிலவு தண்ணொளி சிதறும்!
உனை இழந்து மக்கள் துக்கத்தில் மூழ்க
உனை ஏற்று பரம்பொருள் முக்தி அடையும்!