தனிமை குழந்தை The Lonely Child

தன்னந்தனியாய் கலவரப்படும்
அது
இரைச்சல்களின் ஊடே
தனித்தும் நிற்கிறது

அது தன்
உணர்வின் பூவிதழ்களை
ஒரு மெல்லிசையில்
விரிக்கிறது ..

சிறு பறவைக்கூட்டின்
குஞ்சுகள் போல
தாய்மைக்காக
தவிக்கிறது

மரங்களே இல்லாத
மாநகரச் சாலைகளில்
ஒரு பாவத்தைப் போல
நெளிகிறது ...

மனிதர்களைப் பார்த்துச்
சிரிக்கிறது..
மானுடம் பார்த்து
அழுகிறது

பகலின் பரபரப்புகளில்
அலுவலக கோப்புகளில்
அவசர வேலைகளில்
கலவர நேரங்களில்
அது தன்னைப்போலவே
ஒன்றிற்காக ஏங்குகிறது

எப்போதும்
அது
தன்னைத் தானே
ரசிக்கிறது

நிலவின் ஒளி ஊஞ்சலில்
இரவின் தாலாட்டில்
இமைகளின் மயக்கத்தில்
உயிரின் இசைத் துடிப்புகளின்
மௌன ஆழங்களில்
முத்துக்களை பிரசவித்துக் கொண்டிருக்கிறது
என் தனிமை (2015)

எழுதியவர் : கவித்தாசபாபதி (29-Jul-15, 8:07 pm)
பார்வை : 176

சிறந்த கவிதைகள்

மேலே