ஓ
ஏய்....எமனே....!!
உயிரெடுக்க வந்தவனே...!!
செலுத்தப்படும்
விதம் அறியாமல்
நீ
எடுத்துச் சென்றது
ஏவுகணை.......!!
உன்னை அழித்து
உயிரணுவின்
உண்மையறிந்து
திரும்பப் போவது
நிச்சயம்....!!
நாடெங்கும்
நம்பிக்கை விதையை
நட்டுக் கொண்டிருந்தவரை
விட்டு விட்டுச் சென்றாலென்ன...?!
விதியென்று சொல்லாதே....!!
நீ செய்த
சதியென்று ஒத்துக்கொள்.....!!
இஷ்டப்பட்டு நீ
எடுத்துச் சென்றதால்.....
நஷ்டப் பட்டது
தமிழ்த் தேசம்....!!
விருட்சத்தை
எடுத்துச் சென்றிருக்கிறாய்....!
விண்ணில் நட்டுவை......!
நாளை
எம் தலைமுறை
தங்கள்
இறப்பின் தேதியை
தாங்களே
நிர்ணயித்துக் கொள்ளும்
நாள் வரும்.......
அப்போது
நீ இளைப்பாற
நிழல் வேண்டும்....!!
விருட்சத்தை
எடுத்துச் சென்றிருக்கிறாய்....!
விண்ணில் நட்டுவை......!
எங்கள் சிறார்களுக்கு,
கனவுகண்டு சாதிக்கக்
கற்றுக் கொடுத்திருத்திருக்கிறது
-2020-
இனியுனக்கு,
உயிரெடுக்கும் விஷயத்தில்
முடிவெடுக்கும் அதிகாரம்
- 50:50 -