மரணம் சொல்லும் உண்மை

நீ வாழ்ந்து வந்த
பாதையின் மதிப்பை
உன் மரணம்
மட்டுமே நிர்ணயக்கும்..
உன் மனதிற்கு
மட்டுமே தெரிந்த
ரகசியங்கள் ..
நீ செய்த தவறுகள்
இவைகளே உன்
மரணத்தை ஜனிக்கும் ..
பிறர்க்கு தெரியாது
என நீ செய்யும் பிழைகளை
நிறுத்திக்கொள் -கொஞ்சம்
திருத்திக்கொள் ..
இல்லையேல்
நோய்வாய்ப்பட்டு ,
உடல்ரனப்பட்டு,
பித்தம் சித்தத்தில் கலந்து ,
செவிகேளது
இமைதிராவது
நிமிடம் ஒவ்வொன்றும் ரணமாகி
மரணம் தழுவாத ??
என ஏங்கி ஏங்கி ..!!
தண்டனைகளை சுமந்து
பிணவறையில் கிடப்பாய் ...
அமைதியாக மரணம்
ஜனிக்க
உள்ளுணர்வு கொண்டு
வாழ தொடங்குவோம்
என்றும்...என்றென்றும்...
ஜீவன்