மனதில் வாழும் மைந்தர்
பணமின்றி
பவித்திரமின்றி
யுகத்தில் தோன்றி
சரித்திரம் படைத்து
புகழ் சமுத்திரம் கடந்து
எளிய புன்னகைத்து
மக்கள் மனதில் இடம் பிடித்து
அழியா தடம் பதித்தார்
நிரந்தர ஓய்வெடுக்க
இறைவன் அழைத்திருக்க
புது பயணமும் சென்றிருக்க
இங்கே ஓய்ந்திருப்பது
இந்த விழித்திரை மட்டுமே
திரையாய் ஒலித்துக்கொண்டே
என்றும் மக்கள் மனத்திரையில்
ஓயாத நினைவுகளோடு!