கனவு நாயகனின் கனவு

பொதுநலம் இவரின் பொழுதுபோக்கு,
தன்நலம் பார்க்கும் மனதை பழுது நீக்கு,
அக்னி சிறகினை விரித்து
ஆகாசத்தை அளந்தவர்..!
பட்டிணிப் பசி பாராமல் கல்வி
பாசத்தை விதைத்தவர்..!
கடை கோடி மண்ணில் பிறந்து
பல கோடி மனதில் உறைந்து
ஒரு சோடி கண்களை
கனவு காண செய்த
உன் திருஉருவ படத்தை
தெருக்கோடியெல்லாம்
வைத்து தேம்பி அழும்
பிஞ்சு மனங்களை பார்க்கையிலே
புரிந்து விட்டது இந்தியா
வல்லரசாகி விடுமென்று..!