போதை விழிப்புணர்வு

நீ குடித்துவிட்டு
மயக்கத்தில்
குடும்பம் குடிக்காமல்
மயக்கத்தில்
.........................................................
குடிப்பது சாராயம்
அழிப்பது
கும்பத்தின் ஆதாயம்
........................................................
புகை
நோய்களின் பல வகை
.........................................................
நீ குடித்துவிட்டால்
மதுபானம்
பிள்ளைகள் குடிப்பதற்கு
எது பானம்?
.........................................................
குடிக்கும் குடி
துடிக்கும் குடி
......................................................
நீ போடுகிறாய் புகையிலை
வீட்டில் புகை இல்லை
........................................................
உன் போதை மயக்கம்
வீட்டில் பேதை கலக்கம்
.........................................................
முறையற்ற உடலுறவு
குறைவற்ற நோய்களின் திறவு