மீண்டெழுவாய் ரத்தினமே

போகும் பாதை
தூரமில்லை ,
வானம் நோக்கி
போட்ட எல்லை ..!
காலம் கூப்பிட
விரைந்து சென்ற - ஓர்
நொடியில்
விழி சிவந்தது நீரலையில் ...
மண்ணில் பிறந்திடு (மீண்டும்)
மண்ணில் பிறந்திடு...
விதி மரியப்போனாலும் - உம்
மதியோ மரிப்பதில்லை ,
விலைமதியா ஒளியே - உம்
கதிர்கள் மறைவதில்லை !
தாய் மடிந்த பிள்ளைப்போல்
உள்குமுறி அழுகின்றோம்
மீண்டெழுவாய் ரத்தினமே ...
கருவில் கருணை
விதை விளைப்பவர்தம்
உலகை
உறவேன்றாரே...!
தடைகள் உடைத்து
வளரும் இளைஞர்களை
அக்கினி சிறகென்றாரே ...!
புதுமை தேடிடுமே...
நேர்மை வாடிடுமே...
எழுந்திடு எழாம் அறிவே...