ஆசை

காதலியே
கை கோர்த்து நடக்க ஆசை
மடிமீது தலைவைத்து வானத்து
மதியழகை காண ஆசை
கண்ணாடி முன் நின்று -நீ
கார்கூந்தல் சீவும்போது பின்னாடி வந்து
கட்டித்தழுவ ஆசை
தூறல் மழையில் நனையாமல்-உன்
துப்பட்டா குடை பிடிக்க ஆசை
இன்னும் எத்தனையோ ஆசைகள்
அத்தனையும் அடிமனதில்
சேர்த்து வைத்துள்ளேன்-நீ
அருகில் இல்லாததால்

எழுதியவர் : வேலணையூர் சசிவா (31-Jul-15, 3:27 pm)
Tanglish : aasai
பார்வை : 128

மேலே