வா வா காதல் தா தா

நீ போக தெரிந்தால்
உன் கால்கள் கரையில் நடந்தால்
எந்த உப்புக் கடலும்
ஓடி வருமடி...
நான் என்ன செய்வேன்?
உன் வீட்டு முன்னே வந்து
என் காதல் சொல்லி
கதவை தட்டுவேன்...

காற்று படர்ந்த போல, ஒரு
காதல் படர்ந்தது...
நேற்று இன்று என்று, அது
நெருங்கி வந்தது...

உடல் செல்கள் திறந்து பார்த்தால்
உன் cellular எண்கள்...
உயிர் கண்கள் விழிக்கும் நேரம்
உன் Whatsapp படங்கள்...

ரங்கோலியே...
வாசல் வா வா..
காதல் தா தா..

நீ பாடல் கேட்க
மெல்லிசைக்கு தலை அசைக்க
வாலி வரிகள் தாண்ட
கவிதை தொன்றுமே...
நான் அந்த நேரம்
சில சின்ன பூக்கள் தூவி
என் கண்கள் மூடி
உன்னை நேசிப்பேன்...

பிரிந்திருக்க நேரும், சில
நாட்களுக்கு மட்டும்..
சேர்ந்து வாழ வேண்டும், முழு
ஆயுள் வரைக்கும்...

மடிக்கணிணிப் போல
என்னை மடித்து
மடியில் வைத்துக் கொண்டால்
காதல் virus பட்டு
நின்று போகும்
எந்தன் இதயம்..

வின்மீன் பூவே...
நேரில் வா வா..
காதல் தா தா..

எழுதியவர் : அவா கவி (1-Aug-15, 2:36 pm)
சேர்த்தது : சீனி
பார்வை : 166

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே