கஜல்- 8
உன்னோடு நான் என்னோடு நீ சேர்ந்திட வேண்டும்
எந்நாளிலும் நம் வாழ்வு நாம் வாழ்ந்திட வேண்டும்
தீமைகளின் தொல்லைகளைச் சாய்த்திட வேண்டும்
காதல் சுவைகள் யாவுமே சூழ்ந்திட வேண்டும்
பிரிவென்னுமோர் நோய் வந்து நம்மை ஒரு போதும்
வாட்டாது மெய் உறவிலே நாம் தோய்ந்திட வேண்டும்
நம் காதலைக் காணாது நம் தூய இணைப்பை
ஏற்காத மாந்தர் யாவரும் ஓய்ந்திட வேண்டும்
யாருக்குமே தோன்றாத தோர் தத்துவ உண்மை
நாம் சொல்ல, ஒன்றாய்க் கூடி ஆராய்ந்திட வேண்டும்