ஊர்லே ஒரு வயசான பாட்டி

ஊர்லே ஒரு வயசான பாட்டி

■ குடிதான் காரணம் :
நீதிபதி அவனைப் பார்த்து "இப்பொழுது நீ நல்ல பாடம் கற்றுக் கொண்டிருப்பாய். குடிப்பது கெட்ட பழக்கம் என்று உனக்குப் புரிந்து இருக்கும். நீ மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரின் மீது கோபம் கொண்டிருக்க மாட்டாய். குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரைச் சுட்டிருக்க மாட்டாய்" என்று அடுக்கிக் கொண்டே சென்றார்.
குறுக்கிட்ட அவன், "நீதிபதி அவர்களே! நான் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். இனி நான் குடிக்கவே மாட்டேன். குடித்ததனால் என் குறி தவறி விட்டது" என்றான்.
■ உடல் நலம் கெட்ட பயணம்
ரயில் வண்டியில் பயணம் செய்து இறங்கிய நண்பனைப் பார்த்து, "ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? உடல் நலம் இல்லையா?" என்று கேட்டான் ஒருவன்.
"நான் எப்பொழுது பயணம் செய்தாலும் இஞ்சின் பக்கம் பார்த்தபடி அமர்வேன். நன்றாக இருக்கும். இன்று எதிர்பக்கத்தில் அமர்ந்து வந்தேன். அதனால் உடல் நலம் கெட்டு விட்டது." என்றான் நண்பன்.
"எதிரில் இருப்பவரிடம் உன் நிலைமையைச் சொல்லி இடம் மாற்றி அமர்ந்து இருக்கலாமே?"
"நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் எதிரில் யாரும் அமர்ந்திருக்க வில்லையே. நான் என்ன செய்வேன்?"

■ நோயாளி : நீங்க எழுதி கொடுத்த மாத்திரை எங்கயுமே கிடைக்கல, டாக்டர் !
டாக்டர் : வாடா வா... பேனா எழுதுதான்னு கிறுக்கி பார்த்த பேப்பர தூக்கிட்டு போனது நீதானா???

எழுதியவர் : பிதொஸ் கான் (1-Aug-15, 3:05 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 182

சிறந்த நகைச்சுவைகள்

மேலே