அவளுக்குச் சிக்காத மாப்பிள்ளை

அவளுக்குச் சிக்காத மாப்பிள்ளை..

”நம்ம ஹம்ஸாவுக்கு மாப்பிள்ளை பார்த்து சொல்றதா சொன்னீங்களே தரகரே, ஒண்ணுமே சொல்லல்லையே…?”

“பையன் கொஞ்சம் குள்ளம்…”

“அவ்வளவுதானே.. அதொண்ணும் பெரிய விஷயமில்லையே”

“இல்லைதான்.. கறுப்பாவும் இல்லாம இருந்திருந்தா குள்ளம் ஒரு உறுத்தலா தெரியாது”

“ஓ.. கறுப்பா.. சரி கலர்ல என்ன இருக்கு…”

“வாஸ்தவம்தான்.. குள்ளமும் கறுப்பும் குண்டோட சேர்ந்துகிட்டா கொஞ்சம் இதுவா இருக்கே…”

“குண்டா இருந்தா என்ன? இளைச்சிக்கலாம்.. பையன் லட்சணமா இருக்கானோ?”

“லட்சணம்தான், நல்ல லட்சணம்.. ஆனா பல்லுதான் கொஞ்சம் நீட்டிண்டு இருக்கு”

“அதெல்லாம் இந்தக் காலத்திலே எவ்வளவோ வைத்தியம் வந்தாச்சே.. கண்ணு தீர்க்கமா இருக்குமா?”

“ம்ம்ம்… தீர்க்கம்தான் ஆனா கொஞ்ச்ச்ச்ச்சம் மாறு கண்ணு”

“அதுக்கென்ன.. கூலிங் கிளாஸ் போட்டுண்டா யாருக்குத் தெரியப் போறது? நல்ல வேலைல இருந்து கைநிறைய சம்பாதிச்சா இந்தக் குறையெல்லாம் எங்கே தெரியப் போறது. படிச்சவந்தானே பையன்?”

“ஆமாம்.. ஆமாம்.. படிச்சவந்தான்.. ஒரே ஒரு சப்ஜக்ட்ல போயிடிச்சு. அது இப்ப எழுதி பாஸ் பண்ணிட்டா வேலைக்குப் போயிடலாம்”

“ஓ.. பி.இ ல அரியர்ஸ் வச்சிட்டானா?”

“ம்ம்ஹூம்.. பிளஸ் டூ, பிஸிக்ஸ்ல ஃபெயில்”

“சொத்து சுகம் நிறைய இருக்கிற ஃபேமிலி போலிருக்கு”

“சொத்து கித்தெல்லாம் எதுவும் கிடையாதுங்க”

“ஆமாம்.. கடன் இல்லாம இருந்தாலே போறாதா.. சொத்தெல்லாம் சம்பாதிச்சி வாங்கிக்கலாம்”

“ஜாஸ்தி ஒண்ணும் கடன் இல்லைங்க”

“ஜாஸ்தி இல்லைன்னா?”

“அக்காளுக்கு கல்யாணம் பண்ண கடன் ஒரு பன்னண்டு லட்சம் இருக்கு”

“அக்காவைக் கல்யாணம் பண்ணி அனுப்பியாச்சு. வீட்ல பிக்கல் பிடுங்கல் இல்லை”

“இல்லைங்க…”

“பின்னே?”

“பொண்ணை வீட்டுக்கு திருப்பி அனுப்பிச்சிட்டாங்க”

“இந்தப் பையனைத்தான் நம்ம ஹம்ஸாவுக்குப் பார்த்திருக்கீங்க?”

“ஆமாங்க”

“ஹம்ஸா இல்லைன்னா என்ன.. நான் வேற ஒரு பொண்ணு சொல்றேன், அவளும் ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருக்கா”

“ஏன் கல்யாணம் ஆகல்லைங்க.. செவ்வாய் தோஷமா?”

“செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி எல்லாமே தோஷம்தான்”

“ரொம்ப ஏழைக் குடும்பமோ?”

“ம்ம்ஹூம் நல்ல காசு. மாசம் அறுபதாயிரம் வருது”

“அப்புறம் என்ன? பொண்ணு அழகுல ஏதாவது…”

“நல்ல லட்சணம். மூக்கும் முழியுமா இருப்பா”

“ரொம்ப ஒல்லியோ?”

“ம்ம்ஹூம்.. செம்ம ஃபிகர்…”

“உசரம் கிசரம் ஏதாவது..”

“பொண்ணு அஞ்சடி எட்டங்குலம்”

“பின்னே? மாப்பிளை அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்ன்னு ரொம்ப எதிர்பார்க்குதோ?”

“ம்ம்ஹூம்.. மாப்பிள்ளைன்னு ஒருத்தன் இருந்தா போதும். வேலைக்குக் கூட போ வேணாம்”

“இப்படி ஒரு இடத்துக்கு மாப்பிள்ளை சிக்காம இருக்கிறது ஆச்சரியமாச்சே”

“அதான்.. அதேதான்… மாப்பிள்ளை சிக்காம இருக்கணும்.. அதான் முக்கியம்”

“புரியல்லை.. குழப்பறீங்க”

“போலிஸ் வந்து விசாரிக்கிறப்பல்லாம் இவ என் பொண்டாட்டி. உள்ளே இருக்கிறது ஊர்லேர்ந்து வந்திருக்கிற என் சொந்தக்காரன்னு சொல்லி அவங்க கிட்டே சிக்காம தப்பிக்கத் தெரிஞ்சவனா இருக்கணும்”

எழுதியவர் : பிதொஸ் கான் (1-Aug-15, 3:00 pm)
பார்வை : 139

மேலே