பொண்ணு பையன்

:டேய் இந்த நிலா ஏண்டா இவ்வளவு தூரமா இருக்கு?
பையன்:அது பிரம்மன் கிட்ட கோவிச்சுகிட்டு தூரமா போயிருச்சு.
பொண்ணு: ஏண்டா?
பையன்:அந்த நிலாவுக்கு, நான் தான் அழகுன்னு ரொம்ப திமிரு இருந்துச்சு. பிரம்மன் சொன்னாரு, நீ இவ்வளவு திமிரா இருக்காதே உன்னை படைச்சதே நான் தான் அப்படி'ன்னு.உடனே நிலா, நான் அழகா இருக்கேன் அப்படிதான் இருப்பேன்'னு சொல்லுச்சு.
பொண்ணு:அப்புறம்?
பையன்:உடனே பிரம்மனுக்கு கோவம் வந்து, நிலாவ விட ஒரு அழகான பொண்ணை படைச்சார். உடனே நிலாக்கு பயங்கற கோவம் வந்து, என்னை விட அழகா இந்த பூமியில் ஒரு பொண்ணை படைச்சதால, இனி நான் பூமியில் இருக்க மாட்டேன்னு சொல்லி, கோவிச்சுகிட்டு வானத்துக்கு போயிருச்சு.
பொண்ணு: அப்படியா.. யாருடா அந்த பொண்ணு ?
பையன்:அந்த பொண்ணு என் பக்கத்துல உக்காந்து நிலா கதை கேக்குறா இப்ப..
பொண்ணு :போடா என்ன கலாய்க்கிறயா?
பையன்:ச்சீ இல்ல'டீ. நீ பாசம் காட்டுறதுல அழகு, என்கூட சண்டை போடுறதுல அழகு, வெட்கப்படுறதுல அழகு, நீ அந்த நீலாவ விட ரொம்ப அழகு'டி.
பொண்ணு :ஐ லவ் யூ டா
பையன் :நீ என் உயிரு'டி

எழுதியவர் : பிதொஸ் கான் (2-Aug-15, 2:58 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : ponnu paiyan
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே