அழகோடி பூத்தவளே 555

அவள்...

மானின் பூவிழி நிலத்தை
பார்த்து நடக்க...

மெல்லிய கொடி
இடை மெல்ல ஆட...

செப்பு குடத்தோடு இடது கை
மெல்லிய இடையை தேங்கி நிற்க...

முன்னும் பின்னும்
வலதுகை ஆடி அசைய...

மெல்ல அசைந்தது காற்றில்
அவள் தாவணி...

வெள்ளி கொலுசோ ஓசைகள்
மெல்ல கொடுத்து செல்ல...

பூ முகம் புன்னகையோடு
மெல்ல நிமிர...

அவள் பூவிதழ்களை
ஈரமாக்கியது நாவு...

குளக்கரைக்கு சென்ற
அவளை தொடர்ந்தேன்...

அவளோடு நானும்
சேர்ந்து பேசி மகிழ...

அவளின் இமைகள் சிமிட்டலில்
மௌனமானது என் இதழ்கள்...

அவளை தொட நினைத்த
கதிரவனோ...

அழகில் மயங்கி மெல்ல
மறைகிறான் வெண்மேகத்தில்...

தண்ணீர் குடம் எடுத்து
அவள் நடந்து செல்ல...

அந்த அழகினை நான்
என்னவென்று சொல்ல...

மழைமேக கூந்தலில் மலர்
இல்லாமலே மனம் வீசுகிறது...

அவளை ரசித்த வண்ணம்
நானோ தினம்...

என் காதலை
சொல்லாமலே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Aug-15, 4:39 pm)
பார்வை : 504

மேலே