தீர்வு தேவை

பாலினம் பகுத்து அறியா
பருவமடையா பேதைதனை
பலாட்காரம் செய்யும்
பாவியரை செய்வதென்ன?

கல்யாண ஆசைகாட்டி
கன்னியவள் கற்பை சூறையாடி
காமவெறி முடிந்ததும்
கழட்டிவிடும் காளையரை செய்வதென்ன?

சாதிகலவரத்தை தூண்டிவிட்டு
சாலையோரம் செல்லும்
பேருந்துக்கு தீ வைத்து
பெரும்குற்றம் புரிவோரை செய்வதென்ன?

காதலை மறுத்தால் மறுகணமே
காதலித்தவள் முகத்தினிலே
திராவகம் வீசும்
திறவோன் செயலுக்கு செய்வதென்ன?

வழியிலே தனியே செல்லும்
வஞ்சிதனை வம்பிழுக்கும்
வஞ்சகம் நிறைந்த
வாலிபரை செய்வதென்ன?

உடல் சுகம் தீர்த்த பின்
உயிர்கொண்ட கருவைக் கலைக்கும்
திருமணமாக மாந்தர் செய்யும்
திருட்டுதனத்திற்க்கு செய்வதென்ன?

பெண்குழந்தை பிறந்தாள்
பொறுமை இழந்து இன்றும்
கள்ளிப்பால் கொடுத்து கதைமுடிக்கும்
கயவர் கூட்டமதை செய்வதென்ன?

எழுதியவர் : (2-Aug-15, 5:47 pm)
சேர்த்தது : வேலணையூர் சசிவா
Tanglish : theervu thevai
பார்வை : 66

மேலே