மது விலக்கு வேண்டும்

எழுசீர் விருத்தக் கண்ணிகள் !

மதுவி லக்கு வேண்டும் வேண்டும்
---மண்ணில் யாரு மின்புற
மதுவி லக்கு வேண்டு மிங்கு
---மகிழ்ச்சி வந்து சேரவே

மதுவி லக்கு தேவை பாரில்
---மதிவ ளர்ந்தே ஓங்கிட
மதுவி லக்கு தானே யிங்கு
---மனித ருய்யும் மார்க்கமே !

குடிவ ளர்க்கும் ஆண்க ளிங்கு
---குடிப்ப ழக்கத் தீமையால்
குடிகெ டுக்கும் பண்பை யிங்கு
---குறித்து வைத்துப் போக்கவே

துடிது டிப்புந் தூரம் போக
---துன்ப மதுவி லக்குவோம்
மடிய வேண்டும் மதுப்ப ழக்கம்
---மக்கள் நீடு வாழவே !

வந்து சேர்மின் பார தத்தின்
---வாகை சூடும் வீரர்காள்
முந்தி வந்து தமிழ கத்தில்
---முள்ளென் றாகும் மதுவினை

நிந்தித் தென்றும் நினைவை விட்டு
---நீக்க வந்து சேருவீர்
எந்தத் திக்கும் எழில்வி ளங்க
---ஏற்க அரசு மிஃதையே !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (2-Aug-15, 6:01 pm)
பார்வை : 84

மேலே