இந்தாம்மா பொடவை

இந்தாம்மா பொடவை.

நான் சாரி தாம்மா கேட்டேன்

நீங்க கேட்டதைத்தாம்மா நாந் தர்றேன்.

அய்யோ நா சாரிதாம்மா கேட்டேன்.


பக்கத்து வீட்டுக்காரி உனக்கெதுக்கு எம் பொடவை?

நேத்து எம் பையன் வீட்டுக்குப் பின்னாடி பந்து வெளையாடிட்டு இருந்தான். அது உங்க வீட்டுத்தோட்டத்திலே விழுந்திருச்சு.அதனால உங்களுக்குத் தொந்தரவு குடுத்து நான் இல்லாதபோது அந்தப் பந்தை வாங்கிட்டானாம். அதுக்குத் தான் சாரி கேட்டேன்.

ஏன் தமிழ்ல மன்னிப்புன்னு கேட்டா உன் நாக்கு அழுகிப்போயிடுமா? நா அதக் குத்திக்காட்டத்தான் எம்பொடவையை எடுத்திட்டு வந்து உங்கிட்ட குடுக்க வந்தேன். பெரும்பாலான மக்களால் இந்தியாவில் பேசப்படும் ஒரே செம்மொழி நம்ம தமிழ் மட்டுந்தான். மொழிக் கலவையை விலக்கி நல்ல தமிழ்லே பேசறது கேவலம் இல்லம்மா.

எழுதியவர் : மலர் (4-Aug-15, 8:06 pm)
பார்வை : 244

மேலே