வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்
எண்ணம் எல்லோரிடம்,
எழுத்து பலரிடம்;
செயல் மட்டும் சிலரிடம், அது ஏன்?
காந்தி வழி விடுதலை எண்ணம்
செயல் வடிவம்
பெற்றது எப்படி? நாடே அறியும்!
நாடெங்கும் முன்னேற்றம் கண்டோம்;
வசதி வாய்ப்பு எல்லோருக்கும்
படிப்படியாக கிடைத்தது,
கிடைக்க,? கல்வியும் திறமையும்?
கொண்டோருக்கு முன்னுரிமை, மற்றோருக்கு
சிறு தாமதம்; காரணம்?
போட்டியும் அரசின் திட்டமின்மையுமே!
எல்லோரும் எல்லாமும் பெற தடைக்கல் -
வெளுத்து விட்ட அரசியல்,
வெகு விரைவில் விடை காணும்.
பரம்பரை அழிகிறது,
பணக்காரனும் ஏழையாவது
ஏழையும் பணக்காரன் ஆவது
இன்றும் என்றும் தொடர்கதை.
எண்ணங்கள் செயல் வடிவம் பெற
ஒருங்கிணைந்த திட்டம் தேவை;
நாட்டில் மட்டுமல்ல,
வீட்டிலும் வேண்டும்!
வேலை வாய்ப்பு நம்பி மட்டுமல்ல,
வாழ்க்கை;
விவசாயம் அல்லது வியாபாரம்
தேடதேட கிட்டாததும் கிட்டும்
எட்டாததும் எட்டும்,
முயற்சித்தால் முன்னேற்றம்
முடங்கினால் வாதம்,
பிடிவாதம், விதண்டாவாதம்!
ஓரளவு புரிதல் புதியவகை
ஒவ்வொன்றாய் தெளியும் பல கதை.
இன்றோ மதுவிலக்கு என்பதுவும்
எண்ண வடிவம் பெற்று விட்டது,
செயல் படுத்த காத்திருப்போம்..
அன்னிய கலாச்சாரம் அதை
குருட்டு பாடம் செய்தோம்
இன்றும் அனுபவிக்கும்
தலைமுறை சிந்திக்க
ஒன்று உண்டு!
அமைதியான வீடு,
அறுசுவை சமையல்
ஆன்மீகத்தில் நாட்டம்
அயல் நாட்டில் வாழ்பவனும்
ஆசையாசையாய் பார்க்கிறான்
பொறாமை கொள்கிறான்.
பேசிப்பேசியே
வருடங்களை தொலைத்தோம்,
வாழ்க்கையை?
வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்!