வாழ்வியற் குறட்டாழிசை- 10 கல்விச் செல்வம்

வாழ்வியற் குறட்டாழிசை. 10
கல்விச் செல்வம்.

உலகில் உயர் செல்வம். வாழ்க்கைக்கு
வாய்ப்பாடானது வளமான கல்வியே.

எல்லையற்ற பெருமை, வல்லமை தரும்
இல்லாமையாகாத கல்விச் செல்வம்.

மின்சாரம் ஒளி தருதல் போல
தன்சாரமாய்க் கல்வி(அறிவு) ஒளிரும்

வற்றாத கல்வியை ஒருவன் விற்றாலும்,
வெற்று மனிதனாகினாலும் போகாதது.

பாலாவியன்ன பட்டுடை போன்ற அழகு
மேலான கல்வி தரும்.

பெற்ற ஒருவரின் கல்வியால் குடும்பமும்
உற்றவரும் பயன் பெறுவார்.

கொடுக்கக் கொடுக்க முடிவது பணம்
கொடுக்கக் கொடுக்க வளர்வது கல்வி

நீதியாகக் கற்றபடி ஓழுகாததால் உலகில்
அநீதி மலிந்து நிறைந்துள்ளது.

கல்வியெனும் அமுத தாரையில் அமிழ்ந்து
மூழ்க மூழ்க இன்பம் பெருகும்.

வெட்டினும், கட்டி அடிப்பினும், சுட்டாலும்
பட்டப் போகாதது கல்வி.

சமுதாயப் பள்ளங்கள் நிரவும் கல்வியாளன்
சமூகத்துக் கலங்கரை விளக்கமுமாகிறான்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-8-2015

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். (7-Aug-15, 12:29 am)
பார்வை : 103

மேலே