நல்லவர்கள் நரகத்தில்

அறிதிலாய் பெரும் கூட்டமொன்று
அற்பமாய் அம்மன வார்த்தைகளால்
அர்ச்சிக்கிறது - வார்த்தை அம்புகள் காயத்தால்
வலியில் எவ்வளவோ நல்ல உள்ளங்கள் .............

இருப்பவரிடத்தில் இயலாதவர்கள்
படும் பாட்டினை
அவமானங்கள்கூட அவ்வளவாய்
விவரிக்க முடியாத பெரும்பாலான தருணங்கள் .

இருப்பவர் இல்லாமலும்
இல்லாதவர் இருப்பவருமாய்
இருதய குணங்களில் மாறுபட்டு .

காசுகூட கர்ணன்களை மறுத்துவிட்டு
கஞ்சன்களிடத்தில்
நிரந்தர தஞ்சத்தில் .............

கடவுள்கூட காசுக்கு
ஏழைகளைத்தான் அலைய வைத்துக்கொண்டிருக்கிறான்
அழ வைத்துக்கொண்டும் இருக்கிறான் ,
இன்றும் ...........

மனமும் மானமும்
தன்மானத்தை இழந்து
எங்கோ இருப்பவனின் இல்லத்தில்
அடிமைகளாய் அடைபட்டுத்தான் கிடக்கிறது ............

பக்தி கூட சோதனை என்கிற பெயரிலேயே
பாவத்தின் கொடுமைகளுக்கு
பக்குவமாய் சாக்குபோக்கு சொல்லி
நழுவிக்கொள்கிறது நடைமுறையில் ..........

அபூர்வ மனிதர்களின்
கெளரவம் அடமனங்களில் -
கேட்க விலாசமில்லை ...........

தலைகுனிவுகளின் தண்டனையில்
தலை நிமிராமல்
அதிகமானவர்களின் தன்மானம் .

பொய் முகங்களின் மெய் தூற்றுதல்கள்
ஆறாத அழுகை -
அவமான பாடம் -
மறக்கமுடியாத வன்ம வலி .

இதோ உலகத்தின் நல்லவர்கள் எல்லாம்
நரகத்தில் வசித்ததாய் அனுபவ வரலாறு -
பூமிகூட சாட்சி .

எப்படி இருந்தும்
கடைசி காலத்தில் மட்டும்
இறுதியாய் இணையாய் -
அந்த ஆறடி அளவில் மட்டும் !!!!!

எழுதியவர் : வினாயகமுருகன் (9-Aug-15, 6:18 pm)
பார்வை : 109

சிறந்த கவிதைகள்

மேலே