உறுபசி
எழுத முடியா
ஒன்றை
எழுதிவிட்ட
களிப்பிலும்!!
சிந்தப்பட்ட
கண்ணீரின் ஈரம்
உலரட்டும் எனும்
நினைப்பிலும்!!
தீக்குச்சி
ஒளியில்
வெளிவந்தாயிற்று
ஓர் கவியிலிருந்து
விடுபட்டு!!
அதிகபட்சமாய்
ஐந்தோ ஆறோ
என் ஜென்மம்
சேமித்த பசிக்கு
இரைதேடிய
அடர் இருட்டில்...
மின்சார கம்பத்து
மென் மஞ்சள்
ஒளிக்கீற்றில்
சர்ப்ப பிணைவில்
யவ்வனம்
கரைத்து முடித்து!!!
களைப்பில்
அருந்தி
எறிந்த அவர்கள்
மதுப்புட்டில்
பத்திரப்படுத்தப்பட்டது!!
அது விற்று
கிடைக்கும்
பணத்தில்
என்ன வாங்குவான்!!
தெருவோர
சிறுவன்....
மிஞ்சிப்போனால்
அவன் பசிக்கு
இரு சப்பாத்தி....
இன்னும்
ஆர்வமாய்
எனக்குள் பசி....