எண்ணங்கள் வண்ணங்களாய்
மென்மையான மனங்களில்
மலர்களாக எண்ணங்கள்
எத்தனை வகைகளில் மலர்கள்
அதுபோல் எண்ணங்களின் வண்ணங்களும்
வண்ண வண்ண எண்ணங்கள்
கொள்ளை கொள்ளும் மனதை
அன்பு மலர், ஆசை மலர் ,
கருணை மலர்,, காதல் மலர்
பாசமலர், பருவ மலர்
இன்னும் எத்தனை வகைகளில்
எண்ணங்கள் வண்ணங்களாக
மலருகின்ற தோட்டம் மனங்களே
பூப் போன்ற மனமொன்று தந்தானையா
இறைவன் பூக்களைத்தான்
எண்ணங்களாய் படைத்தானையா