காவியமானவள்-12

விழியீர்ப்பு விசையால் வஞ்சியவள் வசப்படுத்திவிட்டாள் விடுமுறை நாட்கள் வினாடியாய் ஓடியது அவளை பிரிந்த அதிகாலை முதல் அக்னியாய் சுடுகிறதே என நண்பர்களோடு அந்த இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டான் ஆனந்த்...

என்னடா கவியரங்கத்துல வைரமுத்து பேசுர மாதிரி பேசுர என கதிர் கேட்க
காதலித்துப்பார் கவிதை வரும்
கவிபாட விளைகையில் மணி இடர்ப்பட்டு நீ இப்படியே பேசிட்டு இரு அரியர் வைப்பாய் காக்கை கூட கவணிக்காது உன் பிகர் எம்மாத்திரம் என கிண்டல் அடித்தவாறே பயணிக்க பேருந்து கல்லூரி விடுதி வாயிலில் வந்து நின்றது...

ஓட்டியது போதும் ட்ரைவரே ஓட்டுறத நிறுத்திட்டாரு
வாங்கடா இறங்கலாம் என தன் துணிப்பையை கையில் எடுத்தான் ஆனந்த் மூவரும் இறங்கி விடுதி அறையை அடைந்தனர்...

சரி மச்சான் நான் குளிச்சிட்டுதான் வந்தேன் நீங்க குளிங்க என ஆனந்த் சொல்ல சரிடா நீ எப்பவும் போல உன் மரத்தடிக்கு ஓடு புத்தருக்கு போதிமரம்னா உனக்கு நம்ம கேண்டின் வேப்ப மரம் என உண்மை உறைக்க மணி குளிக்கச்சென்றான்...

கதிர் காத்திருந்தான் ஆனந்த் கல்லூரி உடையணிந்து புத்தகத்தை கையிலேந்தி கேண்டின் நோக்கி பயணித்தான்...

அன்றும் வழக்கம் போல் காலை ஏழரை மணிக்கே கலை கட்டியது கேண்டின் முதலாமாண்டு மாணவர்கள் முதல் இறுதியாண்டு மாணவர்கள் வரை அனைவரும் ஒன்றுகூடும் இடம் கேண்டின் மட்டுமே என கூறலாம் மாமன்-மச்சான் அங்காளி-பங்காளி அண்ணன்- தம்பி நண்பன்-பகைவன் என அனைத்து உறவுகளையும் அடையாளப்படுத்தும் ஒரே இடமும் கூட...

முதன் முதலில் ஆனந்தின் நட்பும் இங்கு தான் அறிமுகமானது கல்லூரி முதல்
ஆனந்தை விடுதியில் சேர்ப்பதற்க்காக சேகர் வந்திருந்த நேரம் தன் உடமைகளை கையிலேந்தியபடி விடுதி காப்பாளரிடம் விடுதியில் சேர்வதற்க்கான கடிதத்தை கொடுத்து தனக்கு ஒதுக்கப்பட்ட அறை சாவியை பெற்றுக்கொண்டான் அவன் வரும் வரை யாரும் அந்த அறையில் இடம்பிடிக்கவில்லை...

தன் உடமைகளை அறையில் வைத்துவிட்டு தந்தை சேகரை வழியணுப்ப ஆனந்த் அழைத்துச் செல்ல எதிர்ப்பட்டது கேண்டின் வாடா டீ சாப்ட்டு போகலாம் என சேகர் அளைத்துச்சென்றார் சரிங்கப்பா என உடன் சென்றான் ஆனந்த் பாலும்,டீயும் பெற்றுக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தனர் இருவரும்...பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தையை சேர்த்தபிறகு பென்சில் தின்ன கூடாது,பசங்கள கிள்ள கூடாது டீச்சர் சொல்ரபடி கேட்கனும்னு அட்வைஸ் பண்ட்ற மாதிரி எக்கச்சக்க அட்வைஸ் அந்த நேரம் தான் மணியும்,கதிரும் அங்கு வந்தனர்...

விடுதிக்கு வந்த போது எதிர்ப்பட்ட கேண்டினை பார்த்து பசிக்ர மாதிரி இருக்குடா எதாச்சும் சாப்ட்டு போலாம்னு மணியை இழுத்துவந்தான் கதிர் இருவரும் தனது விருப்பத்தை பெற்றுக்கொண்டு ஆனந்த் இருக்கைக்கு எதிர்புறம் அமர்ந்தனர் ஆனந்த் தந்தை அட்வைசை கேட்டு பிரமித்தனர் இருவரும் என்ன கொடுமடா மச்சான் என அப்போதே இருவரும் கிண்டலடிக்கத் துவங்கினர்,சரிடா பத்திரமா இரு என சேகர் விடைபெற விளைகையில் காலேஜ் எண்ட்ரன்ஸ் வரைக்கும் வந்து உங்கள விட்டுட்டு வரேனு சொல்லி உடன் சென்றான்.

மனியும்,கதிரும் விடுதி காப்பாளரிடம் சென்று விண்ணப்பத்தை கொடுத்த தனக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் எண் அறைக்குச் சென்று அறை பூட்டியிருந்ததால்
வெளியில் காத்திருந்தனர்,

தந்தை சேகரை வழியனுப்பிய ஆனந்த் அறைக்குத் திரும்பினான்...
அங்கு காத்திருந்தனர் மனியும்,கதிரும்...

இருவருக்கும் ஆனந்திற்க்கு ஒதுக்கப்பட்ட அதே அறை ஒதுக்கப்பட்டது காலன் எவ்வளவு கொடியவன் மூவரையும் இப்படித்தான் முடித்துப் போட்டான்,வாங்க நண்பா நீங்களும் இதே ரூம்தானா சீக்கிரம் திறங்க எப்டி இருக்னு பார்க்கலாம் என அவசரப்பட நைஸ் மீட்டிங் நண்பா என கைகொடுத்து கதவை திறந்தான் மூவரும் உள் நுளைந்தனர்,என்ன நண்பா நீங்களும் இப்பதான் வந்திங்களா என மணி ஆனந்திடம் கேட்க ஆமா நண்பா என் பெயர் ஆனந்த் உங்க பேர் என்ன என அறிமுகப் படுத்தி எந்த பள்ளியில் இறுதிவகுப்பு முடிச்சிங்க என ஒருவரை ஒருவர் பகிர்ந்து நட்பிற்க்கு அடித்தளம் போட்டனர்...

பரவால நண்பா ரூம்ப் நல்லாவே இருக்கு கொஞ்சம் ஆல்ட்ரேட் பண்ணனும் என சொல்லி எடுத்துவந்த சட்டை மாட்டும் கம்பியை தொங்கவிட்டான் கதிர்,
மணி தன் மானசீக குருவாக கருதும் ரஜினி,அஜீத் என சிலரின் படங்களை ஒட்டினான் என்ன நண்பா வரும் போதே பக்கா பிளானோடதான் வந்திருப்பிங்க போல இதையெல்லாம் கட் பண்ணிட்டு வந்திருக்கிங்க என கேட்க எனக்கு பிடிச்ச ஹீரோ பாஸ் நம்ப இருக்க இடத்துல எப்பவும் இவங்க இருப்பாக என பதிலுரைத்து ஐஸ்,நயன்,சமன் என மூவர் படங்களையும் தனக்காக தேர்வு செய்த கட்டிலின் பக்க சுவரில் ஒட்டினான்,கதிர் நீங்க எதும் எடுத்து வரலயா நண்பா என ஆனந்திடம் கேட்க இல்ல நண்பா எனக்கு ஹாஸ்டல் இதான் புதுசு அதனால் துணி மற்றும் ரொம்ப தேவயானத மட்டும் எடுத்துட்டு வந்தேன் என்னலாம் எடுத்தாறதுனு தெரியல,
சரி நண்பா எங்க எல்லா பொருளையும் நீங்களும் யூஸ் பண்ணிக்கிங்க என சரி நண்பா ரொம்ப தேங்க்ஸ் என்றான் ஆனந்த் நட்பு வளர்ந்தது...

மரத்தடியில் ஆனந்த் படித்துக்கொண்டிருக்க மனியும்,கதிரும் வந்தனர் மச்சான் எட்டறை ஆச்சுடா வா சாப்ட்டு வரலாம் என இருவரும் அழைக்க இல்லடா இன்னும் இரண்டு சேப்ட்டர் கவர் பண்ணனும் நீங்க சாப்ட்டு வாங்க என இருவரையும் அனுப்பி வைத்து படிப்பில் மூழ்கினான்...

நேரம் கடந்தது ஆனந்த் படித்து முடித்து தன் ரூம்ப் சென்று ஹால் டிக்கெட் தேவையான எழுதுகோல்கள் என மூவருடையதையும் எடுத்துக்கொண்டு கேண்டின் வந்தான் இருவரும் ஆனந்திற்க்காக காத்திருந்தனர் இருவருடைய ஹால் டிக்கெட் மற்றும் எழுதுகோல்களை ஒப்படைத்தான் ஆனந்த்...

ஒன்பது மணி பதிணைந்து நிமிடம் ஆனது மனி ஒலித்தது அனைவரும் தனக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு அறையை நோக்கி சென்றனர் மூவருக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பதை அறிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி அறையை அடைந்தனர்...

எழுதியவர் : கிருபானந் (10-Aug-15, 7:22 am)
சேர்த்தது : கிருபானந்த்
பார்வை : 348

மேலே