விளம்பரங்களின் தாக்கம் -கயல்விழி

மர்ம உறுப்பை
மறைத்துக்கொள்ள
அடம்பிடித்த குழந்தை
தொலைகாட்சியை காட்டி
தந்தையிடம் கேட்டது
'அந்த அக்கா போடுறது வாங்கிதா '
அதிர்ந்து போனாள் தாய்
அங்கே
மாதவிடாய் பாதுகாப்பு மென்துண்டு
(pad) அணிந்து
நடை பயின்றனர் இன்றைய
நாகரீக பெண்கள் .!!