பாவம் சுமந்தேன்

பட்டினி கிடந்து என்ைன பள்ளியிலே சோ்த்தாய்
கல்லும் மண்ணும் தூக்கி என்னை கல்லூாிலே சோ்த்தாய்
வெயிலில் வெந்து என்னை வேளையிலே சோ்த்தாய்
ஆனால் நான் உன்னை சிரமபடாமல் முதியோா் இல்லத்தில் சோ்த்தேன்

பத்து மாசம் உன் வயிற்றில் சுமந்தாய்
மூன்று வருடம் உன் இடுப்பில் சுமந்தாய்
நாற்பது வருடம் உன் மனதில் சுமந்தாய்
ஆனால் நீ இறந்த பின்பு கூட
நான் உன்னை சுமக்கவில்லையே தாயே

நாற்பது வருடம் புாியாதா உன் பாசத்தை
நான் உண்ா்ந்தேன்் அம்மா
வீட்டுக்கும் காட்டுக்கும் செல்லும் வழியில்

தாயாக போற்றபட வேண்டிய உன்னை
திருநீராக பூசுகிறேன்
நீ இல்லாத வீடு அது ஒரு காடு என்பதை உணா்ந்தேன்

அடுத்த ஜென்மத்தில் உனக்கு மகனாக பிறப்பதாக தொிந்தால்
தாயே கண்ணீா் விட்டு சொல்கிறேன்
என்னை கருவிலே அழித்து விடு

எழுதியவர் : வாழ்க்கை (16-Aug-15, 4:03 pm)
Tanglish : paavam sumanthen
பார்வை : 74

மேலே