ஜோடி
தளிர் இலைக்கு பனித்துளிகள் ஜோடி
பனி துளிக்கு குளிர் தென்றலே ஜோடி
வீசு தென்றலுக்கு மண்வாசனை ஜோடி
மண் வாசனைக்கு மக்கும் சருகுகள் ஜோடி
பொன் சருகுகளுக்கு ஆதவன் கதிர்கள் ஜோடி
வெயில் கதிர்களுக்கு மகரந்த தூசி ஜோடி
மகரந்த தூள்களுக்கு தும்பி சிறகுகள் ஜோடி
தும்பி இனத்திற்கு ரீங்கார இசை ஜோடி
ரீங்கரிக்கும் இசைக்கு செவி மடல்கள் ஜோடி
லோலாக்கு மடல்கள் என் காதலியின் ஜோடி
கைகோர்த்து நடைபழக வந்தேன் நாடி
அகம் மகிழ ஆவி லயிக்க அருகில் வாடி